கடலூர் அருகே கோயில் திருவிழாவில் ஒரே சமூகத்தைச் சார்ந்த இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நெல்லிக்குப்பத்தை அடுத்த நத்தம் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் ஆலயத்தின் நிர்வாகம் தொடர்பாக இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கோயில் திருவிழா நாளை நடைபெறவுள்ள நிலையில்,
அதுதொடர்பாக இருதரப்பினர் இடையே வாக்கு வாதம் ஏற்ப்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்ககப்பட்டுள்ளனர்.