ஏழு மாதங்களாக ஊதியம் வழங்காத பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் தமிழக அரசை கண்டித்து அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட நிலையில், தற்போது பணியாற்றிவரும் பகுதிநேர கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலர்கள் என 116 பேருக்கு கடந்த நவம்பர் முதல் 7 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
குறிப்பாக ஊதியத்தை அளிக்குமாறு பாரதிதாசன் பல்கலைக் கழகம் உத்தரவிட்டும், துணைவேந்தர் செல்வம் வழங்க மறுத்து வருவதாக கௌரவ விரிவுரையாளர்கள் குற்றச்சாட்டினர்.
மேலும் மாதாந்திர ஊதியத்தை 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி நிலுவைத் தொகையுடன் வழங்க வலியுறுத்தி, திருச்சி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.