குஜராத் மாநிலம் அமரேலி அருகேயுள்ள சுர்கபரா கிராமத்தில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.
சுர்கபரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயியின் ஒன்றரை வயது பெண் குழந்தை, வெள்ளரி தோட்டத்தில் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் நேற்று பிற்பகல் தவறி விழுந்தது.
அக்குழந்தை 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தகவலறிந்து வந்த பேரிடர் மீட்புப் படையினரும், தீயணைப்புத்துறையினரும் ஆழ்துளைக் கிணற்றுக்குள் ஆக்சிஜன் செலுத்தி, குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அதிகாலை 5 மணியளவில் அக்குழந்தை சடலமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.