சென்னை திருமங்கலத்தில் பாஜக நிர்வாகியின் கணவரை மர்மகும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் நதியா. பாஜக நிர்வாகியான இவருடைய கணவர் சீனிவாசன் திருமங்கலம் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, இவரை வழிமறித்த மர்மகும்பல் சீனிவாசனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிசென்றது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சீனிவாசனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.