மெட்ரோ ரயில் பணி காரணமாக சென்னை, புளியந்தோப்பு பகுதியில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் புளியந்தோப்பு ஸ்ட்ரகான்ஸ் சாலை பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் புளியந்தோப்பு ஸ்ட்ரகான்ஸ் சாலையிலும், அதனை ஒட்டிய பகுதிகளிலும் இன்று முதல் 17-ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி அனைத்து வகையான வாகனங்களும் ஸ்ட்ர கான்ஸ் சாலை வந்து செல்வதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.