மயிலாடுதுறை அருகே உள்ள ஶ்ரீ ராஜமாரியம்மன் கோயில் 108 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.
மூங்கில்தோட்டம் கிராமத்தில் பழமையான ஸ்ரீ ராஜமாரியம்மன் கோயில் உள்ளது. இவ்வாலயத்தின் 13 ஆம் ஆண்டு சம்வஸ்தர அபிஷேக விழாவை ஒட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது.
இதையடுத்து சுமங்கலி பாக்கியம் வேண்டியும், கன்னி பெண்கள் திருமண வரம் வேண்டியும் 108 திருவிளக்குகளால் பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.