விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சார்ஜ் போட்டபடி லேப்டாப் பயன்படுத்திய பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
சொக்கநாதன்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்திமயில், இவருடைய கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், செந்திமயில் அவரது லேப்டாப்பை சார்ஜில் வைத்துக்கொண்டு பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் அவர் மயங்கியுள்ளார். இதைக்கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர், ஆனால் செந்திமயில் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.