பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான வில்வித்தை தகுதி சுற்றில் இந்திய அணியை வீழ்த்தி உக்ரைன் அணி வெற்றி பெற்றது.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான வில்வித்தை தகுதி சுற்று துருக்கியில் உள்ள அன்டல்யா நகரில் நடைபெற்றது.
இதில் பெண்களுக்கான பிரிவில் இந்திய அணியும் உக்ரைன் அணியும் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 3-5 என்ற செட் கணக்கில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது.
அடுத்த கட்டத்திற்கு நுழையும் வாய்ப்பை இந்திய அணி தவறினாலும் புள்ளிகள் பட்டியலில் 8-ம் இடத்தில் இருப்பதால் இந்திய அணிக்கு இன்னொரு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.