கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சரக்கு லாரி மரத்தின் மீது மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மீன்களை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது விளம்பாவூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர மரத்தின் மீது மோதியது.
இதில், ஓட்டுநர் ராஜவேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற போலீசார், காயமடைந்த உதவியாளரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்