மயிலாடுதுறை அருகே காணாமல் போன பெண் வாய்க்காலின் அருகே சடலாமாக மீட்கப்பட்ட நிலையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தியாகராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேன்மொழி, கூலித் தொழிலாளியான இவர் வெளியே சென்றிருந்த நிலையில் வெகு நேரமாகியும் வீடு திரும்பாதது குறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
அதன் பேரில் காவல்துறையினர் அவரை தேடி வந்த நிலையில், தெற்கு ராஜன் வாய்க்காலின் அருகே தேன்மொழி உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
அப்போது கட்டுமான நிறுவனத்தின் வாகனம் மோதி தேன்மொழி உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்கள் சடலத்தை எடுக்க விடாமல் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து தேன்மொழியின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.