நீதிமன்ற விதிகளை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் மற்றும் சமூக வலைதள நிறுவனங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அந்த மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு விசாரணைக்காக கடந்த மார்ச் 28-ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அதுதொடர்பான வீடியோக்களை சுனிதா கெஜ்ரிவால் சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
நீதிமன்ற விதிமுறைகளை மீறி, சுனிதா கெஜ்ரிவால் இந்த வீடியோவை வெளியிட்டதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், அவர் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதேபோல, இந்த வீடியோ பதிவு வெளியான பேஸ்புக், யூடியூப் நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணையை
ஜூலை 9-ஆம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.