ஜம்மு-காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தில் விரைவில் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரியாசி பகுதியில் ஜெனாப் ஆற்றில் ராம்பனையும், ரியாசியையும் இணைக்கும் வகையில் ரயில் பாலம் கட்டப்பட்டது.
ஈஃபிள் டவரை விட 35 மீட்டர் உயரமான இந்தப் பாலம், கடந்த 2022-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு விரைவில் ரயில் சேவை தொடங்கும் என்றும், உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்புத் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என்றும் வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது.