டெல்லி வசந்த் விஹார் சி-பிளாக் மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள 5 கடைகளில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்தப் பகுதியில் கரும்புகை சூழ்ந்தது.
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.