தெலங்கானா மாநிலம் துண்டிகல் விமானப் படை தளத்தில் கண்கவர் விமான சாகச அணிவகுப்பு நடைபெற்றது.
புகையை வெளியேற்றியபடி வானில் அணிவகுத்து சென்ற ராணுவ விமானங்களை ஏராளமானோர் கண்டுரசித்தனர். விமானப் படையின் சூரியகிரண் ஏரோபாடிக் அணி சார்பில் நடைபெற்று வந்த பயிற்சி நிறைவின் ஒருபகுதியாக இந்த விமான சாகச அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.