டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில் நேபாள அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி த்ரில் வெற்றி பெற்றது.
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – நேபாளம் அணிகள் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் விளையாடிய நேபாள அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி த்ரில் வெற்றி பெற்றது.