மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ள எச்.டி. குமாரசாமி, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் கர்நாடக மாநிலம் மாண்டியா மக்களவைத் தொகுதியில் வென்ற அவர், மத்திய கனரக தொழிற்சாலை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து, தான் வகித்துவந்த எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை கர்நாடக சட்டப் பேரவைத் தலைவரிடம் அளித்துள்ளார்.