சத்தீஸ்கர் மாநிலம் அபுஜ்மத் வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில், 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் பாதுகாப்புப் படைவீரர் ஒருவரும் உயிரிழந்தார்.
அபுஜ்மத் வனப்பகுதியில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அங்கு பாதுகாப்புப் படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களை பார்த்ததும் நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். உடனடியாக பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்ததில், 8 நக்சலைட்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அதேசமயம், நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில், பாதுகாப்புப் படைவீரர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார். தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது.