திருச்சி அருகே தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மோதி ஓய்வு பெற்ற விஏஓ பலியானார்.
கல்லக்குடி மால்வாய் சாலை அருகே வசித்து வரும் ஓய்வு பெற்ற விஏஓ தர்மராஜ் என்பவர், புதியதாக வாங்கிய தனது இருசக்கர வாகனத்தில் கள்ளக்குடி சுங்கச்சாவடி அருகே டீ குடிக்க வந்துள்ளார்.
அப்போது அந்தவழியாக நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு வந்த தனியார் ஆம்புலன்ஸ், தர்மராஜ் வந்த இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியது. இதில் தர்மராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கள்ளக்குடி போலீசார், உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.