நெல்லை மாவட்டத்தில் ஆணவக் கொலைகளும், சாதிய ரீதியான கொலைகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், இந்த விவகாரத்தில் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டினார்.