உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் பள்ளத்தில் டெம்போ கவிழ்ந்த விபத்தில் 10பேர் உயிரிழந்தனர்.
ரிஷிகேஷ் அருகே உள்ள ருத்ரபிரயாக் பகுதியில் 17 பேருடன் பத்ரிநாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த டெம்போ, திடீரென சாலையோரம் இருந்த பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது.
தகவலறிந்து வந்த மாநில பேரிடர் மீட்புப் படையினரும், போலீஸாரும் மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.
இந்நிலையில் விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.