போக்ஸோ வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக போவதாக கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
எடியூரப்பா மீது 17 வயது சிறுமி பாலியல் குற்றச்சாட்டை சுமத்திய நிலையில், அவருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், டெல்லியிலிருந்து பெங்களூரு திரும்பிய எடியூரப்பா, ஜூன் 17-ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக ஆஜராக போவதாக தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக தம் மீது இவ்வாறு புகார் தெரிவிப்பதாகவும், காலம் எல்லாவற்றையும் முடிவு செய்யும் என்றும் கூறியுள்ளார்.