தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் கஞ்சா புகைப்பதை தட்டிக்கேட்ட இளைஞரை கும்பலொன்று தாக்கியது.
ஹைதராபாத்தின் கொத்தப்பேட்டையைச் சேர்ந்த ஜனார்த்தன் என்பவரது வீட்டின் முன்பு இரவு நேரத்தில் ஒரு கும்பல் கஞ்சா புகைத்துள்ளனர்.
இதனையடுத்து பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் கஞ்சா புகைக்க கூடாது என அக்கும்பலிடம் ஜனார்த்தன் அறிவுறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் ஜனார்த்தனை கட்டைகள், கற்கள் ஆகியவற்றால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் காயமடைந்த ஜனார்த்தன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.