பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் வரும் 18-ம் தேதி 20 ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் மோடி விடுவிக்கவுள்ளார்.
இதையொட்டி, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை சார்பில் வாரணாசியில் பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
இதில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 17-ஆவது தவணையாக 20 ஆயிரம் கோடி ரூபாயை விடுவிக்கிறார். இதன் மூலம் 9 கோடியே 30 லட்சம் விவசாயிகள் பயன்பெறவுள்ளனர்.
3-ஆவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றதும், இத்திட்டத்துக்கான நிதி சம்பந்தப்பட்ட கோப்பில் பிரதமர் மோடி கையொப்பமிட்டது நினைவுகூரத்தக்கது.
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்ட பிஎம் கிசான் திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.