திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரனை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நாங்குநேரி பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறை உள்ளிட்டவற்றை, அத்தொகுதியின் எம்எல்ஏ ரூபி மனோகரன் கட்சி நிர்வாகிகளுடன் வந்து ஆய்வு செய்தார்.
அப்போது அவரை முற்றுகையிட்ட பொதுமக்கள், அரசு பேருந்துகள் ஊருக்குள் வராதது குறித்து பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய எம்எல்ஏ ரூபி மனோரன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசுவதாக கூறி விட்டு அவசரமாக அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.