சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்பட தயாரிப்பாளர் சவுபின் ஷாஹிரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மஞ்சுமெல் பாய்ஸ் படம் நாடு முழுவதும் 220 கோடி ரூபாய் வசூலித்தது. இதன் தயாரிப்பாளரான சவுபின் ஷாஹிர், படத்தின் பங்குதாரர் சிராஜ் வலியதாரா ஹமீத் என்பவருக்கு ஒப்புக்கொண்டபடி, லாபத்தில் 40 சதவீதம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இதுதொடர்பான புகாரின்பேரில், தயாரிப்பாளர் சவுபின் ஷாஹிரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.