ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு சூழல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரியாசியில் அண்மையில் பேருந்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலின் எதிரொலியாக டெல்லியில் உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, அமர்நாத் யாத்திரை தொடங்குவதை முன்னிட்டு, ஜூன் 16-ம் தேதி உயர்நிலைக் குழு கூட்டத்துக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
அந்த வகையில், டெல்லி நார்த் பிளாக்கில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் அமித் ஷா முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.