கேரளாவில் பாஜக பிரமுகர் வீட்டில் குண்டு வீசியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் நியூ மாஹி பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் வீட்டில் மர்மநபர் ஒருவர், குறைந்த செயல்திறன் கொண்ட குண்டை வீசிவிட்டு தப்பினார்.
நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை. இதுதொடர்பான சிசிடிவி பதிவு வைரான நிலையில், பாஜக பிரமுகர் வீட்டில் குண்டு வீசிய அருண் என்பவரை நியூ மாஹி போலீசார் கைது செய்துள்ளனர்.