ஆபாசமான கருத்துக்களை மேடையில் பேசி வரும் திமுகவைச் சேர்ந்த சர்ச்சைப் பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு, பாஜகவைச் சேர்ந்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள குஷ்பு, நாய் வாலை நிமிர்த்த முடியாது என்ற பழமொழிக்கு ஏற்ப, இவர் பெண்களை மிகவும் புண்படுத்தி பேசி வருகிறார் என வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், முதல்வர் ஸ்டாலின் திரும்பவும் இவரை கட்சியில் இணைப்பதற்காக மட்டுமே சஸ்பெண்ட் செய்துள்ளார் என்று குற்றம் சாட்டிய குஷ்பு, இடைவேளை நேரத்தில் மகிழ்விக்க இந்த வகையான நோய்வாய்ப்பட்ட மனம் கொண்டவர்கள் முதல்வருக்கு தேவையாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களை எப்படி மதிக்கவேண்டும் என்பது குறித்து கடுமையான பாடத்தை அவருக்கு கற்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது எனவும், பாஜக குடும்ப உறுப்பினரான தமிழிசை சவுந்தரராஜனுக்கு உரிய மரியாதையைத் பெற்றுத் தருவோம் என்றும் குஷ்பு உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நடிகை ராதிகா மற்றும் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் ஆகியோர் குறித்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் ஆபாச பேச்சு குறித்து, தேசிய மகளிர் ஆணையத்தில் குஷ்பு புகார் தெரிவித்துள்ளார். (OUT)