திருச்சி விமான நிலையத்தில் நுழைவு கட்டணம் என்ற பெயரில் கட்டண கொள்ளை நடைபெறுவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருச்சி விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களுக்கு 65 ரூபாயாக இருந்த நுழைவு கட்டணம் தற்போது 130 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மூன்று நிமிடங்களுக்குள் பயணிகளை இறக்கிவிட்டு வெளியே வந்தால் மட்டுமே இலவசம் என கூறப்படுவதாகவும், நெரிசல் அதிகமாக உள்ளதால் மூன்று நிமிடங்களுக்குள் வெளியே வருவதற்கு சாத்தியமில்லை எனவும் வாடகை வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். இதனால், தங்களுக்கு போதிய லாபம் கிடைப்பதில்லை எனவும், வாடகை வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.