எளிமையும், கவித்துவமும், நிறைந்த மொழி நடையால், தமிழ் படைப்புலகில் தனியிடத்தைப் பிடித்துள்ள யூமா வாசுகி , தனது ‘தன்வியின் பிறந்த நாள்’ நூலுக்காக, சாகித்திய அகாடமியின் குழந்தை இலக்கியத்துக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது வென்றிருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில்இ, தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்து வரும் இளைஞர் லோகேஷ் ரகுராமன், தனது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘விஷ்ணு வந்தார்’ நூலுக்கு, யுவ புரஸ்கார் விருது வென்றிருக்கிறார். அவருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்து, படைப்புலகில் மேலும் பல சாதனைகள் படைக்க, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.