திரையில் ஆயிரம் ஹீரோக்கள் தோன்றினாலும் நிஜ வாழ்க்கையில் ஒவ்வொரு குழந்தைகளின் ஹீரோ அப்பாக்களே… தந்தையர் தின நாளில் குடும்பத்தின் அச்சாரமாக விளங்கும் அப்பா பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்……
உன்கென வேணும் சொல்லு உலகத்தே வாங்கி தரேன்.என் கைய புடிச்சிக்க இல்லன்னா கீழ விழுந்துறுவன்னு ஒவ்வொரு அடியும் கூடவே வரது அம்மான்னா தைரியமா எதனாலு செய்யுன்னு தள்ளி நின்னு தன்னோட குழந்தைக்கு எதுவும் ஆகிற கூடாதுன்னு ஒவ்வொரு அடியையும் பக்குவமா பாத்துக்கிறது அப்பா. தந்தையோட பாசத்தையும், கண்டிப்பையும் கண்முன்னே பாத்தாலும், அத ஆழமா உணர்த்துறது என்னமோ சினிமா தான்.
ஒரு சில படங்கள் பெரிசா எடுபடல நாளு அந்த படங்களுல காட்டுற செண்டிமெண்ட் காட்சிகள் குறிப்பா அப்பா செண்டிமெண்ட் காட்சிகள் படத்த பெருசா ஹிட் அடிக்க வெச்சிடும்.
பொதுவா எல்லா பசங்களுக்கு தன்னோட அப்பா சின்ன வயசுல பெரிய ஹூரோவா தெரியும் ஆனா வாலிப வயசு வரும்போது என்னடா இது நொய் நொய்ன்றாருப்பான்னு நினைப்பாங்க அதுநாலவே அம்மாகிட்ட தான் பசங்க க்ளோஸ்சா இருப்பாங்க. இப்படி திட்டுறதுக்கான காரணம் ஒன்னு தாங்க எங்க நம்ம பையன் நம்மள மாதிரி ஆகிருவான்னோ, லைப்ல சரியான பாதையில நம்ம பையன் போகனுன்ற பயம் தான். அதுக்காக அப்பா திட்டிக்கிட்டு தான் இருப்பாருன்றது இல்ல அப்பா எப்போமே தன்னோட பசங்ககிட்ட உரிமையா பேசுறேன்றதுல நாள பசங்களுக்கு ஒரு சின்ன ட்ரா பேக் ஆகிடுது ஆனா அது காலப்போக்குல மாறிடுது.
அப்பாக்கும் மகளுக்கும் இருக்குற உறவு ரொம்ப அழகு ரொம்ப தெளிவானதுன்னு சொல்லலாம். காரணம் நல்ல விசயங்கள முதல்ல அப்பாாகிட்ட சொல்லிட்டு நெகடிவ்வா நடக்குற விசயத்த பெண்கள் அம்மாகிட்ட தான் சொல்லுவாங்க. ஏன்னா அப்பா கிட்ட சொன்னா அதையே நினைச்சிட்டு வெளில காட்டிக்காம பீல் பண்ணிகிட்டு இருப்பாரு அப்பான்ற நாலவே அம்மாகிட்ட தான் சொல்லுவாங்க.
ஒரு அப்பா எங்க தெரியுமா வில்லனா ஆகுறாரு. ஆண் புள்ளங்கள பொருத்தவர பையன் நல்லா படிச்சி செட்டில் ஆகனுன்ற எண்ணம் இருக்கும் ஆதுவே பெண் புள்ளைங்கள பொருத்தவர ஏன் புள்ள நல்லா வரன்னும் அவ லைப்ல் நினச்சத செய்யன்னும் அப்படின்ற ஆனா எண்ணம் இருந்தாலும் ஊர் வாயில விழுந்துர கூடாது, இஷ்டத்துக்கு பேசிருவாய்ங்கன்னு பெண் குழந்தைங்க கிட்ட சில நேரத்துல கடுகடுன்னு நடந்துப்பாங்க. அது வேற ஒன்னும் இல்ல ஊர் எதுவும் பேசிட கூடாதுன்ற தடுப்பு தான்.
ஹ்ம்ம் அதே மாதிரி டைமிங்ல ரைமிங் அடிக்கிறது நம்ம அப்பாவ தவிற வேற யாருக்கு நல்லா தெரிய போகுது.
மொத்ததுல குறைவான பேச்சு நிறையா செயல்கள் செய்யும் அப்பா கருவறையில்லனாலு காலம் முழுக்க சுமக்கிறாரு. அப்பாவோட அன்பு மரத்தோட வேர போன்றது கண்ணுக்கு தெரியாது ஆனா ஆழம் அதிகம்.