தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டின் முன்புற பகுதி மாநகராட்சி அலுவலர்களால் இடித்து அகற்றப்பட்டது.
ஹதராபாத் லோட்டஸ் சர்க்கிளில், ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான வீடு அமைந்துள்ளது. இவரது வீட்டின் முன்புறம் பாதுகாவலர்கள் தங்குவதற்காக சாலையோரமுள்ள நடைபாதையை ஆக்கிரமித்து கட்டடம் கட்டப்பட்டிருந்தது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை மாநகராட்சிக்கு புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஜெகன்மோகன் ரெட்டி வீட்டின் முன்புறம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடம் மாநகராட்சி அதிகாரிகளால் இடித்து அகற்றப்பட்டது.