ஜப்பானில் பரவி வரும் அரியவகை நோயால் இதுவரை 977 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பானில் கடந்த 2-ம் தேதி அரியவகை நோய் கண்டறியப்பட்டு பொதுமக்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
STSS எனப்படும் Streptococcal toxic shock syndrome என்ற இந்த வகை நோய் தொற்றால் இதுவரை மொத்தம் 977 பேருக்கு பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயானது, உடல் பகுதியை சாப்பிட கூடிய பாக்டீரியாவால் ஏற்பட கூடியது. எனவே மனிதர்களை 48 மணிநேரத்தில் கொல்லும் சக்தி படைத்த இந்த நோயால் கால்வீக்கம், தொண்டைவலி, சுவாசக்கோளாறு உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.