ஹமாஸ் ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் 8 இஸ்ரேலிய ராணுவத்தினர் உயிரிழந்தனர்.
காசா முனையில் ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கு இடையே போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில் ரபா நகரின் டீர் எல்-பலிகா பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்புப்படையினர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்களை குறிவைத்து ஹமாஸ் ஆயுதக்குழுவினர் திடீர் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் நிகழ்விடத்திலெயே 8 ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.