கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரத்தில் திருஞானசம்பந்தர் முத்து பல்லக்கு விழா, வெகு சிறப்பாக நடைபெற்றது.
சிவபெருமான் திருஞானசம்பந்தருக்கு பட்டீஸ்வரத்தில் முத்து பல்லக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருஞானசம்பந்தர் மடத்திலிருந்து, திருமேற்றளிகை கைலாசநாதர் கோவிலுக்கு முத்து பல்லக்கில் திருஞானசம்பந்தரின் ஐம்பொன் சிலை கொண்டு செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பட்டீஸ்வரம் திருச்சத்திமுற்றம் சக்திவனேஸ்வரர் கோவிலுக்கு திருஞானசம்பந்தரின் பல்லக்கு பக்தர்களால் கொண்டு செல்லப்பட்டது. மேலும், திருஞானசம்பந்தர் முத்து பந்தலில் சென்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.