தென்காசி மாவட்டம், குற்றால அருவிகளில் தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
கடந்த சில வாரங்களாக சரிவர மழை பொழியாததன் காரணமாக பழைய குற்றால அருவி, பேரருவி, ஐந்தருவி, புலி அருவி உள்ளிட்டவற்றில் குறைந்த அளவிலேயே தண்ணீர் கொட்டுகிறது. இருப்பினும் தொடர் விடுமுறையையொட்டி அருவியில் குளித்து மகிழ ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். கூட்டம் காரணமா நீண்ட வரிசையில் நின்று சுற்றுலா பயணிகள் குளித்து சென்றனர்.