தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் வரத்துக் குறைவின் காரணமாக மல்லிகைப்பூ கிலோ 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையானது.
சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மலர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நோயின் தாக்கத்தால் விளைச்சல் குறைந்ததால், மலர் சந்தையில் மல்லிகைப் பூக்களின் வரத்து குறைந்தது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு 800 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த மல்லிகை பூ, தற்போது கிலோ 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சுபமுகூர்த்த நாட்களில் பூக்களின் விலை மேலும் உயரக்கூடும் என வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.