உலகின் மிக வயதான ரயில் ஓட்டுநர் என்ற பெருமையை பெற்று அமெரிக்காவைச் சேர்ந்த 81 வயது மூதாட்டி அனைவரையும் வாயடைக்கச் செய்துள்ளார்.
அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்தில் உள்ள மாசௌசெட்சில் ஹெலன் ஆண்டெனுச்சி எனும் 81 வயது மூதாட்டி வாழ்ந்து வருகிறார். இவர் அந்நகரின் மாசௌசெட்ஸ் போக்குவரத்து நிறுவனத்தின் சார்பில் இயக்கப்படும் ரயிலில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த 1995-ம் ஆண்டு தனது 53-வது வயதில் ரயில் ஓட்டுநராக தனது பணியைத் தொடங்கிய ஹெலன் தனது பணியை தொடர்ந்து செய்து வருகிறார். இந்நிலையில் உலகின் மிக வயதான ரயில் ஓட்டுநர் என்று கின்னஸ் சாதனை அங்கீகாரம் பெற்று ஹெலன் சாதனை படைத்துள்ளார்.