சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பாதஹஸ்தாசனத்தின் சிறப்பை கூறும் வகையில் பிரதமர் மோடிவெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, உலகம் முழுவதும் யோகா தொடர்பான சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், பாதஹஸ்தாசனத்தின் செய்முறையையும், அதன் பலன்களையும் கூறும் வகையிலான வீடியோவை பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் உள்ள கார்ட்டூன் பிரதமர் மோடியின் உருவத்தை ஒத்துள்ளது.