மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்த கருத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் நடைமுறையிலிருந்து அகற்ற வேண்டும் எனவும், மனிதர்கள் அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் அவை ஹேக் செய்யப்படுவதற்கான ஆபத்து உள்ளதாகவும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்ய முடியாத அளவுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டவை என்று விளக்கம் அளித்தார். மேலும் எலான் மஸ்க் விரும்பினால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து விளக்கமளிக்கத் தயாராக இருப்பதாகவும் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.