சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பாதுகாப்பு படை வீரர்களை அம்மாநில முதலமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அபுஜ்மர் பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஏராளமான போலீசார் அப்பகுதிக்கு சென்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்புவீரர் ஒருவர் உயிரிழந்த நிலையில் காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் வீரர்களை முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் நேரில் சந்தித்து பேசினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.