சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் பலர் கலந்துகொண்டு சூரிய நமஸ்காரம் செய்தனர்.
சேரா யோகத்தான் 2024 என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் 8 வயது முதல் வயதானவர்கள் வரை சுமார் 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சூரிய நமஸ்காரம் செய்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த இந்திய யோகா சங்கச் செயலாளர் இளங்கோவன், சூரிய நமஸ்காரம் செய்வது ஆன்மாவை தூய்மைப்படுத்தி, இரத்த ஓட்டத்தை அதிகரித்து செல்களை சிறப்பாக செயல்பட வைக்க உதவும் எனத் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து யோகா நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு அவர் சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கினார்.