டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்தார்.
அப்போது அவர், குடியரசுத் தலைவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இதேபோல், கார்ப்பரேட் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ராவும், குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.