தென்காசி மாவட்டம், குற்றலாம் அருகே இரு வேறு இடங்களில் ஏற்பட்ட கார் விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
குற்றாலத்தில் குளித்துவிட்டு சொந்த ஊர் திரும்பியவர்கள் சென்று கொண்டிருந்த கார், கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் 2 பேர் உயிரிழந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதே போல, கோவையில் இருந்து குற்றாலம் வந்த 9 பேர் பயணித்த வாகனம், லாரி மீது மோதியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.காயம் அடைந்த 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.