தியாகத் திருநாளாம் பக்ரீத் நன்னாளில், அனைவரிடையே அமைதியும், மனித நேயமும் நிலவவும், சமத்துவமும், சகோதரத்துவமும் மலர வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
கருணையும் ஈகையும் வலியுறுத்தும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு, தமிழக பாஜக சார்பாக, எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தியாகத் திருநாளாம் பக்ரீத் நன்னாளில், அனைவரிடையே அமைதியும், மனித நேயமும் நிலவவும், சமத்துவமும், சகோதரத்துவமும் மலரவும், எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.