மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் பயணிகள் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் பலர் காயமுற்றனர். சம்பவ இடத்தில் மீட்பு படையினர் ரயில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.
தகவல் அறிந்த பேரிடர் மீட்புக்குழுவினர், ரயில் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்துள்ளனர். டார்ஜிலிங் மாவட்டம் பனிஷ்தேவா பகுதியில் ரயில் விபத்து நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது
சேதம் குறித்த முழு விவரம் இன்னும் வெளியாகவில்லை. பலர் பலத்த காயமுற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து டார்ஜிலிங் காவல்துறையின் கூடுதல் எஸ்பி அபிஷேக் ராய் கூறுகையில்,
இந்த விபத்தில் ஐந்து பயணிகள் இறந்துள்ளனர், 20-25 பேர் காயமடைந்துள்ளனர். நிலைமை மோசமாக உள்ளது. சரக்கு ரயில் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது மோதியதில் இந்த சம்பவம் நிகழ்ந்தது” என்று தெரிவித்தார்.