ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் என பாதுகாப்புப் படையினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.
ஜம்மு- காஷ்மீர் பாதுகாப்பு சூழல் தொடர்பாக பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அவர் டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.
இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, ராணுவ தளபதி மனோஜ் பாண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு படையினரிடம் அமித் ஷா கேட்டுக்கொண்டார்.
அமர்நாத் யாத்திரை ஜூன் 29-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவான அளவில் மேற்கொள்ளுமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.