பக்ரீத் பண்டிகையையொட்டி நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
தியாகத் திருநாள் அல்லது ஹஜ் பெருநாள் என்றழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுக்கூறும் விதமாக ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், நடப்பாண்டு பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள ஜமா மசூதியில் அதிகாலையில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
இதேபோன்று, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.