மதுரை – பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களை கர்நாடகாவுடன் இணைக்கும் வகையில் மதுரை – பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த நிலையில், அதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது.
மதுரையில் இருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இது பயணிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் காலை 5.15 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் பிற்பகல் 1.15 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தை அடையும் என ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடையில் திருச்சியில் 7.15 மணிக்கும், சேலத்தில் 9.55 மணிக்கும் தலா 10 நிமிடங்கள் மட்டும் நின்று விட்டு வந்தே பாரத் ரயில் புறப்பட்டு செல்லும் கூறப்பட்டுள்ளது.
மறுமார்க்கத்தில் பிற்பகல் 1.45 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தில் புறப்படும் ரயில் மாலை 5 மணிக்கு சேலத்திலும், இரவு 8.20 மணிக்கு திருச்சியிலும் நின்று செல்லும் என்றும், இரவு 10.25 மணிக்கு மதுரை வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.