பக்ரீத் பண்டிகையையொட்டி சென்னையில் இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன் படி மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பக்ரீத் பண்டிகையை ஒட்டி இன்று ஒரு நாள் மட்டும் சனிக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும் எனவும் ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் எனவும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். எனவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.